“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” – வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்
Vikatan

ஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன.
சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.