This article is from Jan 02, 2018

சென்னை மீம்ஸ் மற்றும் edudharma சர்ச்சையும், வேலைக்காரன் படம் பாணியில் கார்ப்ரேட் தந்திரமும்….

புதிதாக படிப்பவர்கள் இதை முதலில் படிக்கவும்: சென்னை மீம்ஸ் விவசாயிகள் பெயரில் வாங்கிய பணம் என்ன ஆனது.. சர்ச்சையும் விடையும்..

சென்னை மீம்ஸ் செய்த SAVE FARMERS CAMPAIGN-ல் நமக்கு தேவை மக்கள் பணம் மக்களுக்கே சரியாக சென்றடைவது தான். சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல் என்பதையும் தாண்டி பல தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி பலரும் அவர்களை திட்டுவதை கவனிக்க முடிகிறது. அதில், நமக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. கேள்வி எழுப்புவதும், கணக்கு கேட்பதும், அந்த பணத்தை சரியானவரிடம் சேர்க்க அறிவுறுத்துவதும் நமது உரிமை என்ற அளவில் இதனை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.

சென்னை மீம்ஸின் நிர்வாக இயக்குனர் திரு.கெளதம் கோவிந்தராமன் மட்டும் தான். இந்த சர்ச்சையில் அடிபடும் பிற பெயர்கள் எல்லாம் சென்னை மீம்ஸ் பக்கத்தின் அட்மின்கள் மட்டுமே. இந்த அனைவருமே தனித்தனியே தொடர்புக் கொண்டு தங்களது விளக்கத்தை அளித்துள்ளனர். திரு.கெளதம் நடந்தவைகளை விவரித்தார். திரு.குணாவிடம் அவர் பல சேவை அமைப்புகளோடு தொடர்பில் இருப்பதால் edudharma 5  சதவீதம் கமிசன் எடுத்தது போக அளித்த மீதி தொகையை ஒப்படைத்திருந்தோம். அவர் முறையான பயனாளிகளை கண்டறிவதற்கும், அதை கொண்டு சேர்ப்பதற்கும், மாடுகளை வாங்குவதற்கும் உதவுவதாக தெரிவித்திருந்தார். காலதாமதம் ஆனதால் அதற்குள் சமூக வலைதளங்களிலும் கேள்வி எழுந்ததால், அந்த பணத்தை எங்களிடமே ஒப்படைத்து வருகிறார்.

Indegogo platform-ல் சுமார் 2.5 லட்சம் திரட்டப்பட்டது. அதை திரு. ஸ்ரீ கணேஷ் முன்னாள் சென்னை மீம்ஸ் அட்மின் அவரது நண்பர் bank account-டோடு connect செய்துள்ளனர். அதைப் பற்றிய பொறுப்பு முழுவதும் ஸ்ரீ கணேஷ் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது நண்பர் account-க்கு பணம் வந்ததா என்று உறுதியாக தெரியவில்லை. இதையே நம்மை தொடர்புக் கொண்ட ஸ்ரீ கணேஷ், இதற்கு நான் பொறுப்பு இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த பணம் எங்கிருப்பது என்பதைப் பார்த்து சேர்த்து விடுகிறேன் அல்லது அது என் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். திரு.குணாவை நாம் தொடர்புக் கொண்ட போது இதற்காக பணம் பெற்றதையும், அதை திருப்பி அளித்து வருவதையும் உறுதி செய்தார்.

Edudharama தரப்பினர் கணக்கு கேட்ட அன்று எங்களைக் கேட்காமல் எங்களது பெயரை எழுதியது ஏன் என்று கேட்டனர். Edudharama-விற்கு நாம் தகவல் சொன்னது ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம். Edudharama-விற்கு மட்டும் சொன்ன தகவல் சென்னை மீம்ஸ் வரை சென்று திரு.குணா பேசினார், edudharma பாலாஜி தகவல் சொன்னதாகத் தான் நம் நிறுவனரை தொடர்புக் கொண்டார். ஆக, edudharma-விற்கு அந்த மாதமே தெரியும். Edudharma ceo சென்னை மீம்ஸில் அட்மினாகவும் இருந்திருக்கிறார். சமீப காலம் வரை அவர்களுடைய crowd funding platform விளம்பரத்திற்கு சென்னை மீம்ஸை பயன்படுத்தியுள்ளனர்.

தகவல் சொல்லப்பட்டும் சென்னை மீம்ஸை பொது வெளியில் கேள்வி கேட்காததற்கு காரணம் என்ன?

திரு.சத்திய நாதன் milapp-ல் தொடங்கிய campaign-ஐ edudharma-வில் செய்வோம் என்று வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்தார்கள் என்கிறார் சத்யா. என்னைத் தொடர்புக் கொண்டு monthly target achieve செய்ய வேண்டும், ஆதலால் இதை நாம் செய்தே ஆக வேண்டும் என்று edudharma தரப்பினர் கேட்டனர். 6.5 கோடி இலக்காக வைத்தது edudharma தான் என்றும், இப்படி சீரியல் நம்பரை போல் ஒரு நம்பரை போடுகிறீர்களே என்று கேட்டதற்கு அவ்வளவு கடன் இருக்கிறது போடத்தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறுகிறார் திரு.கெளதம்.

இப்படி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கடனை கட்டுவதற்கு campaign-ஐ ஆரம்பித்து வைத்தது edudharma தான். பின் அதன் குறிக்கோளை மாடுகள் தருவதாக மாற்றியுள்ளனர். இதை தொடங்கிய என்னிடம் அனுமதி வாங்கவில்லை. மேலும், அவர்களது campaign-ல் கொடுக்கப்பட்டிற்கும் மெயில் id என்னுடையது.  Just crowd funding platform ஆக இருந்தால் பணத்தை என்னிடம் தானே ஒப்படைத்திருக்க வேண்டும். Campaign moto-வை மாற்றியது ஏன்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை edudharma-வின் முன் வைக்கிறார் திரு.சத்திய நாதன்.

எல்லாவற்றிலும் உடன் இருந்து விட்டு இதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் edudharma, எங்களுக்கு 5 சதவீதம் கமிசன் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்ததா ?. 6.5 கோடியில் 5 சதவீதம் என்றால் 30.5 லட்சம் அப்போது, உங்களது இலக்காக இருந்தது இது தானா ? சேவை செய்வதாக வெளியில் பெயர், சத்தம் இல்லாமல் சம்பாத்தியம் .

டெல்லி விவசாயிகள் போராட்டம் நடந்த சூழலில் , தற்கொலை செய்கிறார்கள் என்று தமிழகமும், உலகத் தமிழர்களும் வருத்தத்தில் இருந்த உணர்வலையை உங்கள் லாப நோக்கத்திற்கு பயன்படுத்தியதா ?

அல்லது தொடர்ந்து சென்னை மீம்ஸ் உடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கிறோம். அதனால் அது பாதிக்கப்படும் என்கிற பயமா ?. வெளி நபராக இருந்து இத்தனை விசயங்களை எழுதி வருகிறோம். மக்கள் பணம் மக்களுக்கே என்ற பொறுப்பு இருந்திருந்தால் நாங்கள் செய்த வேலையை நீங்கள் என்றோ செய்திருக்க வேண்டும் அல்லது கணக்கு எங்கே என்ற கேள்வியை நாங்கள் எழுப்பிய பின்பாவது நீங்கள் செய்திருக்கலாம். அதை விடுத்து தவறான ஆதாரத்தை நீங்களும் வெளியிட்டது ஏன்?

It maybe legal but highly not ethical

மேலும், இப்படி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை உதவி வேண்டும் என்ற பதிவுக்கு விளம்பர செலவு செய்வது சரிதானா என்று கேட்டதற்கு, ஊரில் உள்ள எல்லா பக்கங்களும் அப்படி தான். 10 லட்சம் ரூபாய் உதவி வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் செலவு செய்து தான் ஆக வேண்டும் என்கிறார் பாலாஜி.

” திரு.கெளதம் இப்போது நம்மை தொடர்பு கொண்டு இரண்டு Account-இல் திரட்டப்பட்ட பணத்தை ஒன்று சேர்த்து சரியான நபர்களை சென்றடைய செய்வதே நோக்கம். அதற்கு நீங்கள் ஒரு குழுவை உருவாக்குங்கள். YouTurn நிறுவனரும் பத்திரிகையாளருமான உங்கள் கண்காணிப்பில் செய்யலாம். நீங்களே நிதி சரியாக சென்றடைவதை உறுதி செய்து மக்களுக்கு சொல்லுங்கள் என்கிறார். இதையே இந்த குற்றச்சாட்டை வெளியில் கொண்டுவந்த சத்தியநாதனும் சொல்கிறார். ” குழு என்றால் பிற பக்கங்களின் அட்மின்கள், முன்னணி வழக்கறிஞர், பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், முகநூல் பிரபலங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், அதற்கு முன் முழுமையான நிதி உங்களிடம் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தினார் ” நமது நிறுவனர் ஐயன் கார்த்திக்கேயன் “.

You Turn குழு.

Please complete the required fields.




Back to top button
loader