This article is from Jan 30, 2018

வளரும் நாடுகள் பட்டியலில் பின்தங்கியது இந்தியா.

பரவிய செய்தி

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு. பட்டியலில் பாகிஸ்தான் 47வது இடத்திலும், இந்தியா 62வது இடத்திலும் உள்ளன.

மதிப்பீடு

சுருக்கம்

சர்வதேச பொருளாதார மையத்தின் சார்பில் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறைக்கான திட்டம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.

விளக்கம்

டாவோஸில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மையத்தின் (WEF) வருடாந்திர சந்திப்பு நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக சர்வதேச பொருளாதார மையத்தின் வளரும் பொருளாதார நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிட்டப்பட்டது.

இந்த பட்டியல், மக்களின் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடன் சுமைகளில் இருந்து வருங்கால தலைமுறையினரை பாதுகாத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இவற்றை மையமாகக் கொண்டு நாட்டு மக்களின் வளர்ச்சி குறியீடை நிர்ணயித்துள்ளனர்.

உள்ளடக்கிய வளர்ச்சி குறியீட்டு, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மக்களின் பங்கு எத்தகையது என்ற கருத்தைப் பிரதிபலிக்கும். இது ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் GDP-க்கு மாற்றாகும். 

inclusice growth

சென்ற ஆண்டு 79 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 60வது இடத்தில் இருந்தது. சீனா  15வது மற்றும் பாகிஸ்தான் 52வது இடத்திலும் இருந்தன.

2018ஆம் ஆண்டின் 103 நாடுகள் கொண்ட பட்டியலில், மேம்பாட்டை உள்ளடக்கிய வளர்ச்சியில் 29 நாடுகளும், தலைமுறைக்கான சம வாய்ப்பில் 74 நாடுகளும் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  மேலும், இப்பட்டியல், நாட்டின் வளர்ச்சி மாற்றம் பின்னோக்கி செல்வது, மெதுவாக பின்னோக்கி செல்வது, நிலையானது, மெதுவாக முன்னேற்றம், முன்னேற்றம் என்ற ஐந்து நிலையையும் கொண்டு வகைப்படுத்தப்பட்டது.

இந்தப் பட்டியலில் லித்துவேனியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 62வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் (22), சீனா(26), வங்கதேசம்(34), இலங்கை(40), பாகிஸ்தான்(47) ஆகிய இடங்களில் உள்ளன.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடத்திலும், லக்சம்பேர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும், அமெரிக்கா 23-வது மற்றும் ஜப்பான் 24-வது இடத்திலும் உள்ளன.

வளரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் சென்ற ஆண்டு 60-வது இடத்தில் இருந்த இந்தியா இவ்வருடம் 62-வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader